ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22









ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22


📝 கோரிக்கை எண்1:- 

பள்ளி கல்வி துறையில் 1998  முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை , அடிப்படை பணிச்சலுகைகள் , மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்


📝 கோரிக்கை எண்2:- 

RTE சட்டத்தின் படி சிறப்பு பயிற்றுநர்கள் அரசுப்பள்ளிகளில் 1 - 8 வகுப்புகளில் பணி நியமனம்  செய்ய வேண்டும் இதில் DPEP , SSA , SS திட்டங்களில் 23 ஆண்டு பணி அனுபவம் பெற்று  பணியாற்றி வரும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து கருணை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் பணிநிரந்தரம் செய்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும்.


📝 கோரிக்கை எண்3:- 

Day Care Centre / SRP மைய பராமரிப்பாளர் மற்றும் உதவியாளர் இருவருக்கும் பணிச்சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்


மேற்கண்ட கோரிக்கை குறித்து தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து நிறைவேற்றிட  வேண்டுமாய்

SS-IE_Tamilnadu♿ மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - அரசுப்பள்ளிகளில் 1-8 வகுப்பில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கு கல்வி , சிறப்பு பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் 1761 சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் - தமிழக அரசு  கருணையோடு பரிசீலித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பு

-மாற்றுத்திறன் மாணவர்களுக்கான -சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் விடுத்துள்ள கோரிக்கை .