-மாற்றுத்திறன் மாணவர்களுக்கான -சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் விடுத்துள்ள கோரிக்கை .
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22 📝 கோரிக்கை எண் 1. பள்ளி கல்வி துறையில் 1998 முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை , அடிப்படை பணிச்சலுகைகள் , மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல் பள்ளி கல்வி துறையில் 1998 முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு 💥பணி ஆணை வழங்கி பள்ளி அல்லது பி.ஆர்.சி எதேனும் ஒரு இடத்தில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். 💥வங்கி கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும். 💥தொடர்ந்து தற்செயல் விடுப்பு அனுமதி , மதவிடுப்பு , மகப்பேறு விடுப்பு 💥RCI - CRE பயிற்சி SPO மூலமாக வழங்க ஆவண செய்ய வேண்டும். 💥தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 💥டிசம்பர் 3இல் உரிய அங்கீகாரம் வழங்கி கெளரவித்தது ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். 💥விபத்து காப்பீடு , இறப்பு இழப்பீடு வழங்குதல...